வளரும் படங்கள்!

‘லிப்ட்’ கேட்டால் கொடுக்கலாமா?

கடந்த ஆண்டு, ’டிராபிக்’ மற்றும் ’ஆர்டினெரி’ ஆகிய மலையாளப்படங்கள், ‘சென்னையில் ஒரு நாள்’ மற்றும் ‘ஜன்னலோரம்’ என்று சுடச்சுட தமிழில் மாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்தன. இந்த ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கி, மோகன்லால் நடித்த ‘த்ருஸ்யம்’ தமிழில் தயாராகிறது.

அடுத்து அருண்குமார் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘காக்டைல்’, தமிழில் ‘அதிதி ’ என்ற தலைப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது.

நந்தா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘நாடோடிகள்’ புகழ் அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். ‘தமிழ்மகன் ’ படத்தின் மூலம் விஜயை இயக்கிய பரதன் இந்தப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். பரத்வாஜ் இசை. கட்டுமான நிறுவனம் மூலம் பிரபலமான தொழிலதிபராக இருக்கும் நந்தாவும், அவரது மனைவி அனன்யாவும் தங்களது 6 வயது மகளை பள்ளியில் விட்டுவிட்டு காரில் திரும்புகிறார்கள். வழியில் தோழமையான தோற்றம் கொண்ட ஒரு இளைஞர் லிப்ட் கேட்கிறார். உதவும் மனப்பான்மையுடன் அவருக்கு லிப்ட் தருகிறார்கள். முதலில் மென்மையாகப் பேசும் அவர், அதன்பிறகு குரலை உயர்த்தி அவர்களது குழந்தையைக் கடத்திவிட்டதாகச் சொல்லி, அவர்களை ஆட்டிப்படைக்கிறார். அவரிடமிருந்து தப்பித்து, தங்கள் குழந்தையை காப்பாற்றினார்களா என்பதுதான் ‘அதிதி’ படம் என்கிறார் இயக்குனர் பரதன்.

காணாமல்போன கதாநாயகி

மலையாள சினிமாவின் தந்தை ஏனப் போற்றப்படும் ஜே.சி.டேனியல். 1930ஆம் ஆண்டு இவர் இயக்கி, நடித்து, ‘விதககுமாரன்’ என்ற மவுனப்படத்தைத் தயாரித்தார். ‘தி லாஸ்ட் சைல்ட்’ என்று ஆங்கிலத்திலும் தலைப்பு வைத்தார். இந்தப்படம்தான் மலையாள சினிமாவின் முதல் படம். இதைக் கேரள மாநில அரசு ஏற்றுக்கொண்டு அரசிதழில் வெளியிட்டது.

சாதீய ஒடுக்குதல் அதிகமாக இருந்த அந்த காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ரோஸி என்ற ஓர் ஏழைப்பெண்ணை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் டேனியல். இதனால் இந்தப்படத்தை கடுமையாக எதிர்த்தனர். முதல்காட்சி திரையிட்ட நாளில் கதாநாயகியை ஓடஓட விரட்டி அடித்தனர். ரோசி எங்கே போனார், என்ன ஆனார் என்று இன்றுவரை தெரியவில்லை. இதன்பிறகு சினிமாவை விட்டு விலகிய டேனியல், பல் மருத்துவம் படித்து ‘டெண்டிஸ்ட்’ ஆனார். டேனியலின் வாழ்க்கையை, பிரபல மலையாளப்பட இயக்குனர் கமல், ‘செல்லுலாயிட்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் கடந்த ஆண்டு உருவாக்கினார். ப்ரித்விராஜ் நடித்து, தயாரித்த இந்தப்படம், கேரளாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 7 விருதுகளையும் குவித்தது. தற்போது இந்தப் படத்தை யோகராஜ் பாலசுப்பிரமணியம் என்பவர் தமிழில் தயாரித்து வெளியிடுகிறார். படத்திற்கு ‘ஜே.சி. டேனியல்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

அர்ஜுனின் பிரமாண்டக் கனவு

அர்ஜுனுக்கு ஒரு இயக்குநராகவும் பெயர்வாங்கிக் கொடுத்த படம் ‘ஜெய்ஹிந்த்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை 20 கோடி செலவில் தயாரித்து, நடித்து, இயக்கி வருகிறார். “இது என் நீண்ட கால கனவு! இந்த படத்தில் தேசத்துக்கான ஒரு கதையை கையாண்டிருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லியிராத ஒரு கதை. இதில் நம் கல்விமுறைக்கு தேவைப்படும் சீர்திருத்தத்தை நேரடியாகச் சொல்லாமல் கதாபாத்திரங்கள் வழியாகச் சொல்லுகிறேன். சர்வதேச பின்னணியில் திரைக்கதை நகரும். ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக, இயக்குநராக இது எனக்கு பெருமை சேர்க்கும் படமாக இது இருக்கும். இந்த படத்தை மாணவர்கள் கண்டிப்பாக நேசிப்பார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறேன்” என்கிறார்.

இந்தப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக சுர்வின் சாவ்லா நடிக்கிறார். ஹாலிவுட்டிலிருந்து கேச்சா என்ற ஸ்டண்ட் இயக்குநரை இந்தப்படத்தின் மூலம் அறிமுகப் படுத்துகிறார். வழக்கமாக அர்ஜுன் படங்களுக்கு இசையமைக்கும் வித்யா சாகர் இல்லை. இம்முறை இசைக்கு வி.ஹரிகிருஷ்ணா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

வணிகம்

39 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்