பொட்டுகாடு ரீமேக்கில் சிம்பு?

By செய்திப்பிரிவு

'பொட்டுகாடு' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவுசெய்திருக்கிறார் சிம்பு.

சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் வரிசையினை எடுத்துக் கொண்டால் அதில் கண்டிப்பாக இருக்கும் பெயர் மனோஜ் மஞ்சு. மோகன் பாபுவின் கடைசி மகன் தான் மனோஜ் மஞ்சு. பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் நடித்த படம் தான் 'பொட்டுகாடு'.

தற்கொலை செய்து கொள்ளும் இடத்தில் சந்திக்கும் இரு நபர்கள் தங்களது கடந்துகால வாழ்க்கை பகிர்ந்துக் கொள்ளும் கதையே 'பொட்டுகாடு'. மனோஜ் மஞ்சு நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற படம் இது தான்.

கன்னடப் படமான 'Govindaya Namaha' படத்தின் ரீமேக் தான் 'பொட்டுகாடு'. கன்னடம், தெலுங்கு என தொடர்ச்சியாக இக்கதை வரவேற்பை பெற்றிருப்பதாலும், மனோஜ் மஞ்சுவின் நெருங்கிய நண்பரான சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து இருக்கிறார்கள். 'பொட்டுகாடு' படத்தில் சிம்பு, 'புஜ்ஜி பில்லா' பாடலை பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவிற்கு சிம்புவும் பச்சக்கொடி காட்டிவிட்டார். 'பொட்டுகாடு' படத்தினைத் தயாரித்த நிறுவனமே தமிழ் ரீமேக்கையும் தயாரிக்க இருக்கிறது. படத்தினை இயக்க சேரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

வாலு, வேட்டை மன்னன், பாண்டிராஜ் இயக்கும் படம், ஆகிய படங்களைத் தொடர்ந்து 'பொட்டுகாடு' ரீமேக்கில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

29 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்