தமிழ் சினிமா

‘தி கோட்’ புரமோஷனுக்கு கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது: விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

நடிகர் விஜய், ‘தி கோட்’ படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ‘தி கோட்’ பட புரமோஷனில் தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெயரை பயன்படுத்தக் கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ‘தி கோட்’ படத்துக்காக தயாரிக்கப்படும் பேனர்களில், தமிழக வெற்றிக் கழகம் பெயரை தவிர்த்து, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நிர்வாகிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT