தமிழ் சினிமா

2 கோடி பார்வைகளை கடந்த ‘காவாலா’

செய்திப்பிரிவு

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தமன்னா, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக. 10-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இருந்து ‘காவாலா’ என்ற பாடல் 6-ம் தேதி வெளியானது. வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் சுமார் 2 கோடி (20 மில்லியன்)க்கும் அதிகமான பார்வையாளர்கள் யூடியூப்பில் இந்தப் பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.

SCROLL FOR NEXT