தமிழ் சினிமா

சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்!

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித் ‘துணிவு’ படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார். லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவர் சொன்ன கதை அஜித்துக்குப் பிடிக்கவில்லை என்பதால் மாற்றப்பட்டார். இதையடுத்து, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’, ‘கலகத் தலைவன்’ படங்களை இயக்கிய மகிழ் திருமேனி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அஜித்தின் 62-வது படமான இதற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க போவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் நடித்திருக்கிறார் அஜித்.

SCROLL FOR NEXT