‘கேஜிஎஃப்’ நிறுவனத்தின் புதிய படத்தில் ஃபஹத் ஃபாசில் - ‘தூமம்’ முதல் தோற்றம்

By செய்திப்பிரிவு

‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. இதில் ஃபஹத் ஃபாசில் நாயகனாக நடிக்கிறார்.

‘யூ டர்ன்’, ‘லூசியா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பவன்குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய படம் ‘தூமம்’ (Dhoomam). இப்படத்தை ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்யூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பூர்ணச்சந்திர தேஜஸ்வி இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

முதல் தோற்றத்தைப் பொறுத்தவரை ஃபஹத் பாசில் வாயில் டேப் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலில் புகை வெளியாவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்ற கருத்தை மறைமுகமாக உணர்த்தும் வகையில் ஒருவித குறியீடுகளுடன் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்