‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ தோல்விப் படமல்ல: இயக்குநர் அபினவ் விளக்கம்

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் பலரும் மலையாள படமான ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியடைந்த படம் என தெரிவித்த நிலையில், அதற்கு படத்தின் இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வினீத் ஸ்ரீனிவாசன் நடிப்பில் அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’. சுராஜ் வெஞ்சாரமூடு, தன்வீ ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை அஜித் ஜாய் தயாரித்திருந்தார்.

அண்மையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பலரும், படம் வெளியானபோது பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியடைந்ததாகவும், தற்போது ஓடிடியில் வெளியான பிறகு பலராலும் படம் பார்க்கப்பட்டு வரவேற்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

பாக்ஸ் ஆஃபீஸ் தோல்வி என்பதை மறுத்துள்ள இயக்குநர் அபினவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படம் பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியடைந்ததாக பலரும் பதிவிட்டு வரும் கருத்தைப் பார்க்கிறேன். அப்படியில்லை. படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி காணவில்லை என்றாலும், தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித் தந்துள்ளது. ஒட்டுமொத்தமாக டீசன்டான வசூலை படம் பெற்றுக் கொடுத்துள்ளது. யாரும் பணத்தை இழக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்