சரித்திர கதையில் சமந்தா - ‘சாகுந்தலம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

நடிகை சமந்தா நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான ‘சாகுந்தலம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

‘யசோதா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தில்ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்தப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. பான் இந்தியா முறையில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? படம் சரித்திர கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. பிரம்மாண்ட செட்டுகளுடன் அரசர் கால கதையைக்கொண்ட இந்த ட்ரெய்லரில் 3டிக்கான தேவையை உணர முடிகிறது. சமந்தாவின் அறிமுக காட்சி ஈர்ப்பு. காதல் அதைதொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளாக விரியும் ட்ரெய்லரில் அதிதி பாலன், கௌதமி கதாபாத்திரங்கள் கவனம் பெறுகின்றன. சமந்தாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைச்சுற்றி படம் நகர்வதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. இருப்பினும் தெலுங்கு சாயலில் புராண கதைகளை அடிப்படையாக கொண்டிருக்கும் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு கனெக்ட் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

16 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்