தென்னிந்திய சினிமா

விஜய் தேவரகொண்டா - சமந்தாவின் புதிய படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

செய்திப்பிரிவு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை சமந்தா இணையும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பு 23-ம் தேதி காஷ்மீரில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'மகாநதி' படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா - சமந்தா இணையும் புதிய படத்தை சிவ நிர்வனா இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் 'ஹிர்தயம்' புகழ் அப்துல் வஹாப் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ராணுவ பின்னணியில் உருவாகும் காதலை கதைக்களமாக கொண்ட இந்தப் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 23-ம் தேதி காஷ்மீரில் தொடங்கி 27 நாட்கள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் ஆழப்புலா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமந்தா தற்போது 'சகுந்தலம்' என்ற படத்திலும், யசோதா என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

SCROLL FOR NEXT