விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ ஏப்ரலில் வெளியீடு!

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ (Family Star) படம் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கீதா கோவிந்தம்’, ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. மிருணாள் தாக்குர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். ரொமான்டிக் ஃபேமிலி டிராமாகவாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குநர் கௌதம் நாயுடு தின்னனுரியுடன் கைகோக்கிறார். இவர் நானியை வைத்து தெலுங்கில் ‘ஜெர்ஸி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிருணாள் தாக்குர் நடிப்பில் அடுத்ததாக ‘பூஜா மேரி ஜான்’ இந்திப் படம் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்