தென்னிந்திய சினிமா

‘சலார்’ சண்டைக் காட்சிக்கு 750 வாகனங்கள்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சலார்: பார்ட் 1- சீஸ்பயர்’.‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படமான இதை, ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.

பிருத்விராஜ், ஜெகபதி பாபு வில்லன்களாக நடிக்கின்றனர். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் டிச.22ல் வெளியாக இருக்கிறது.

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தின் சண்டைக் காட்சிகளில்750 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஜீப்புகள், லாரிகள் என பல வகை வாகனங்களையும் பயன்படுத்தியுள்ளனர். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக இந்தக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT