மலையாள சினிமாவில் சாதனை: ரூ.176 கோடி வசூலை எட்டிய ‘2018’

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் உச்சபட்ச வசூல் சாதனையை படைத்து வரும் டோவினோ தாமஸின் ‘2018’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.176 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் நாளை (ஜூன் 7) ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

படம் வெளியாகி இன்றுடன் 31 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் ரூ.176 கோடி வசூலை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் தமிழ், தெலுங்கில் படம் படம் வெளியானது. மலையாள சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்துள்ள இந்தப்படம் நாளை (ஜூன் 7) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க> 2018 (Everyone is a Hero) திரைப் பார்வை: பேரிடரில் துளிர்க்கும் பேரன்பும், அட்டகாசமான திரை அனுபவமும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்