மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்கான ‘மிலி’ படத்தில் நடித்துள்ளார். ஜான்வி கபூர் அறிமுகமான படத்தில் இருந்தே, ஸ்ரீதேவியையும் அவரையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி பேசிய போனிகபூர், “ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். தென்னிந்தியாவில் சுமார் 200 படங்கள் நடித்த பிறகே, அவரை வட இந்தியர்கள் பார்த்தார்கள். அவருக்கு அற்புதமான பயணம் இருந்தது. ஜான்வி இப்போதுதான் நடிக்க வந்திருக்கிறார். அதனால், அவரையும் ஜான்வியையும் ஒப்பிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.