'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்திடம்தான் உள்ளன. இந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரீமேக் தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டார். புஷ்கர் - காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.

இந்தப் படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இறுதியாக சைஃப் அலி கான் - ஹ்ரித்திக் ரோஷன் இருவரும் நடிப்பது உறுதியானது.

நீண்ட மாதங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை முடிந்து, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

7 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

5 mins ago

சினிமா

23 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

17 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

31 mins ago

வலைஞர் பக்கம்

35 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

45 mins ago

மேலும்