பாலிவுட்

‘‘கங்கனா திறமையான நடிகை, ஆனால்...?” - அனுராக் காஷ்யப் சொன்ன தகவல்

செய்திப்பிரிவு

பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின், ‘மகாராஜா’, சுந்தர் சியின் ‘ஒன் டு ஒன்’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இவரும் நடிகை கங்கனா ரனாவத்தும் ‘குயின்’ படத்தின் ஒன்றாகப் பணிபுரிந்தனர். அப்போது நட்பாக இருந்த இவர்கள் பின்னர் சமூக வலைதளத்தில் மோதிக் கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனுராக் காஷ்யப், கங்கனாவின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

அவர் கூறும்போது, “கங்கனா ரனாவத் சிறந்த நடிகை. நடிப்பு என்று வரும் போது அதில் அவர் நேர்மையாக இருப்பார். அவரின் திறமையை அவரிடமிருந்து யாரும் பிரித்துவிட முடியாது. ஆனால், அவருக்கு வேறு சில பிரச்சினைகள் உள்ளன. அவரைச் சமாளிப்பது கடினம்” என்று தெரிவித்துள்ளார். இதே போல இயக்குநர் ஹன்சல் மேத்தாவும் கங்கனாவைப் பாராட்டியிருக்கிறார்.

SCROLL FOR NEXT