மார்ச் 20, 2023 | தங்கம் விலையில் மாற்றமில்லை: சவரன் ரூ.44.480 க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரன், ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சரனுக்கு ரூ.880 அதிகரித்து, ரூ 44 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம் தொட்டது. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி, ஒரு கிராம் தங்கம் ரூ.5,560-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,400 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.74,000-ஆக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

11 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

46 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்