பங்குச்சந்தை | சென்செக்ஸ் 562 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 406 புள்ளிகள் சரிவடைந்து 57,583 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 120 புள்ளிகள் சரிவுடன் 16,979 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் சரிவுடனேயேத் தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 562.94 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,426.96 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 140.55 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,959.50 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், வங்கிகள் சந்தித்திருக்கும் நெருக்கடிகள் முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் அச்சம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடனேயே வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், டாட மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

உலகம்

27 mins ago

சினிமா

39 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்