மருத்துவக் காப்பீட்டுத் தொகையைப் பெற நோயாளி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை

By செய்திப்பிரிவு

வதோதரா: மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாவிட்டாலும் கூட, நோயாளிக்கு உரிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று வதோதரா நுகர் வோர் விவகார தீர்வு ஆணையம் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்திர ஜோஹி. 2016 ஆண்டு, அவரது மனைவிக்கு உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஒரு நாள் தங்கி சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர். சிகிச்சைக்கு ரூ.44,500 செலவானது. அவர் மருத்துவக் காப்பீடு செய்திருந்த நிலையில், காப்பீட்டு நிறுவனத்தில் சிகிச்சைக்கான செலவை சமர்ப்பித்து காப்பீட்டுத் தொகையை கோரினார். ஆனால், அந்த காப்பீட்டு நிறுவனமோ, அவரது மனைவி 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்க வைக்கப்படவில்லை என்பதால் நிறுவன விதிப்படி காப்பீடு வழங்க முடியாது என்று கூறி அவரது காப்பீட்டுக் கோரிக்கையை நிராகரித்தது.

இதை எதிர்த்து அவர் 2017-ம் ஆண்டு வதோதரா நுகர்வோர் விவகார தீர்வு ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், “தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இருக்கிறோம். இப்போது குறைந்த நேரத்தில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதனால்,24 மணி நேரத்துக்குள் நோயாளி சிகிச்சை பெற்று திரும்பினாலும், அவருக்கு உரிய காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ரமேஷ்சந்திர ஜோஹிக்கான உரிய காப்பீட்டுத் தொகையோடு அவருக்கு மன உளைச்சல் ஏற்ப டுத்தியதற்காக ரூ.3000, வழக்கு செலவுக்கு ரூ.2000 சேர்த்து வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்