மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தை புரட்டிப் போட்டுள்ளது.
இதையடுத்து, துறைமுகம் முதல் மின்சாரம் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த அதானி குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு கடந்த ஜனவரி 24-ம் தேதியிலிருந்து 135 பில்லியன் டாலருக்கும் அதிகமாக (ரூ.11.07 லட்சம் கோடி) இழப்பைச் சந்தித்துள்ளன.
செலவினங்களை குறைத்து கடனை திருப்பிச் செலுத்திய போதிலும் அந்த குழுமத்தின் நடவடிக்கை முதலீட்டாளர்களிடம் போதிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, பங்குகளை விற்பனை செய்யும் போக்குதொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு நேற்றைய நிலவரப்படி 100 பில்லியன் டாலருக்கும் (ரூ.8.20 லட்சம் கோடி) கீழாக சரிந்தது.
தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அதானி கிரீன்எனர்ஜி, அதானி போர்ட்ஸ்