சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 221 புள்ளிகள் (0.37 சதவீதம்) வீழ்ச்சிடைந்து 60,286 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 43 புள்ளிகள் (0.24 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,722 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் தட்டையாகவே தொடங்கின. காலை 09:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 69.44 புள்ளிகள் உயர்வடைந்து 60,576.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,790.10 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் அறிக்கை, புதன்கிழமை வெளியாக இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிக்கை குறித்த அச்சம் போன்றவை இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய வர்த்தகத்தை மந்தபோக்கிலேயே வைத்திருந்தன. இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 592 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 60,063 வரை சென்றது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 220.86 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,286.04 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 43.10 புள்ளிகள் சரிவடைந்து 17,721.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை கோடாக் மகேந்திரா பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, என்டிபிசி, எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

20 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

28 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

34 mins ago

ஆன்மிகம்

44 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்