யூகோ வங்கியின் நிகர லாபம் 110 சதவீதம் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்தயூகோ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 110.37 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2022-23-ம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ரூ.652.97 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2021-22-ம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.310.39 கோடியுடன் ஒப்பிடுகையில் 110.37 சதவீதம் அதிகமாகும்.

டிசம்பருடன் முடிவடைந்த 9மாத காலத்தில் வங்கியின் நிகர லாபம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1,281 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகர வட்டி வருவாய் ரூ.1,762.61 கோடியிலிருந்து 10.74 சதவீதம் உயர்ந்து ரூ.1,951.87 கோடியானது. இதரவருமானம் ரூ.719.15 கோடியிலிருந்து ரூ.823.46 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் 31 நிலவரப்படி வங்கியின் சர்வதேச வர்த்தகம் ரூ.3,94,228.98 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. இவ்வாறு யூகோவங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

28 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

26 mins ago

சினிமா

44 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

38 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

52 mins ago

வலைஞர் பக்கம்

56 mins ago

சினிமா

1 hour ago

மேலும்