போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் 3-ம் இடம் பிடித்தார் கவுதம் அதானி - ஜெப் பிஸோஸ் பின்தங்கினார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஜெப் பிஸோஸை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் 3-ம் இடம் பிடித்துள்ளார்.

இந்திய தொழிலதிபரான கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஆண்டு மளமளவென உயர்ந்தன. இதனால், போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறிய கவுதம் அதானி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-ம் இடம் பிடித்தார். பின்னர் அவரது அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு பின்னர் 4-ம் இடத்துக்கு பின்தங்கினார்.

இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அதானி குழும பங்குகள் உயர்ந்து வந்தன. நேற்று ஒரே நாளில் அவரது பங்குகளின் மதிப்பு ரூ.2,600 கோடி உயர்ந்து ரூ.10.92 லட்சம் கோடியானது. இதையடுத்து, அவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் 3-ம் இடத்தைப் பிடித்துள் ளார். இதுவரை 3-ம் இடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோஸ் ரூ.10.5 லட்சம் கோடியுடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

லூயிஸ் வுட்டான் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.12.95 லட்சம் கோடியுடன் 2-ம் இடத்தில் நீடிக்கிறார். இந்த 3 பேரும் பட்டியலில் மாறி மாறி இடம் பிடித்து வருகின்றனர். ஆனால், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரூ.18.5 லட்சம் கோடி சொத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்