சில்லறை பணவீக்கம் 7 % ஆக அதிகரிப்பு - மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பண வீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து 8-வது மாதமாக இப்பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நிர்ணய வரம்பான 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. உணவுப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவே சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

சில்லறைப் பணவீக்கம் நடப்பாண்டு ஜூலையில் 6.71 சதவீதமாகவும், கடந்த 2021 ஆகஸ்டில் 5.3 சதவீதமாகவும் காணப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள் தொகுப்புக்கான பணவீக்கம் 7.62 சதவீதமாக அதிகரித்தது. இது, முந்தைய ஜூலையில் 6.69 சதவீதமாகவும், கடந்தாண்டு ஆகஸ்டில் 3.11 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த ஜூலையில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 4 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 2.4 சதவீதமாக உள்ளது.

நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 2.2 சதவீதம் என்ற அளவில் மிக குறைந்த வளர்ச்சியை கண்டிருந்த தொழில் துறை உற்பத்தி ஏப்ரலில் 6.7 சதவீதமாகவும், மே மாதத்தில் 19.6 சதவீதமாகவும், ஜூனில் 12.7 சதவீதமாகவும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

க்ரைம்

31 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

39 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்