புதுடெல்லி: நடந்து முடிந்த 2021-22-ம் நிதி ஆண்டில் வரி வசூல் உச்சம் தொட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் சேர்த்து மொத்தமாக ரூ.27.07லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட ரூ.5 லட்சம் கோடி அளவில் அதிகம்.
வருமான வரி மற்றும் நிறுவனவரி போன்ற நேரடி வரிகளின் வசூல்ரூ.14.10 லட்சம் கோடியாக உள்ளது.இது பட்ஜெட் இலக்கைவிட ரூ.3.02 லட்சம் கோடி அதிகம். மறைமுக வரிகளின் வசூல் ரூ.12.90 லட்சம் கோடியாக உள்ளது. இது பட்ஜெட் இலக்கை விட ரூ.1.88 லட்சம் கோடி அதிகம். 2020-21-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நேரடி வரிகள் 49 சதவீதம் அளவிலும், மறைமுக வரிகள் 30 சதவீதம் அளவிலும் அதிகரித்துள்ளன.
வரி மற்றும் ஜிடிபி இடையிலான விகிதாச்சாரம் 2020-21ம் நிதி ஆண்டில் 10.3 சதவீதமாக இருந்தது. நடந்து முடிந்த நிதி ஆண்டில் அது 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.