பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி: பங்குகள் கடும் சரிவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பங்குச்சந்தைகளில் அந்நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவடைந்தன.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான முறையில் பண பரிமாற்றம் செயயப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்த வகையில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது.

சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பங்குச்சந்தைக்கு அந்த வங்கியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் வெளியானதால், பங்குச்சந்தைகளில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவடைந்தன. 10.50 ரூபாய் சரிவடைந்து 151.15 ரூபாயாக வர்த்தகமாகின.

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நஷ்டம் ரூ.971 கோடி

 

ரூ.20 ஆயிரம் கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்த எஸ்.பி.ஐ. வங்கி

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE