சென்செக்ஸ் 440 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 440 புள்ளிகள் (0.66சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,266 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 118 புள்ளிகள் (0.60 சதவீதம்) வீழ்ந்து 19,659 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85.33 புள்ளிகள் உயர்வடைந்து 66,792.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.35 புள்ளிகள் உயர்ந்து 19,806.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல், நிதி மற்றும் வாகனப் பங்குகளின் சரிவு, மாதாந்திர எஃப் அண்ட் ஓ காலாவதி போன்ற காரணங்களால் தொடக்க ஆதாயங்களைத் தவறவிட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 66,984 வரையிலும், நிஃப்டி 19,868 வரையிலும் உயர்ந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 440.38 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,266.82 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 118.40 புள்ளிகள் வீழ்ந்து 19,659.90 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, மாருதி சுசூகி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், கோடாக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

54 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்