பிரதிநிதித்துவப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

மானுடத்தை காக்குமொரு மகத்தான தத்துவம் காந்தி: கமல் ஹாசன் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன்

"மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று.
உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்."

இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT