காரைக்காலில் இன்று (டிச.6) அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அம்பேத்கர் நினைவு தினமான இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தனித்தனியே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.