ஒரு நிமிட வாசிப்பு

உவமைக் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாள் விழா: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

உவமைக் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

மரபுக் கவிதைத் தொகுப்புகள் பல வழங்கிய உவமைக் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் போற்றும் வகையில் சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கவிஞர் சுரதாவின் சிலை மற்றும் அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்குத் தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, வேலு, பிரபாகரராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT