ஒரு நிமிட வாசிப்பு

கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பியபின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.

மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என்று கமல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல்வேறு துறைகளில் கமல்ஹாசன் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT