பிரதிநிதித்துவப் படம். 
ஒரு நிமிட வாசிப்பு

பொள்ளாச்சியில் மழை வெள்ளத்தில் சிக்கிய கோயில் ஊழியர்கள்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிய கோயில் ஊழியர்கள் இருவரை தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கடந்த சில தினங்களாகவே பொள்ளாச்சி அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வந்தது. இந்த நிலையில், அர்த்தநாரி பாளையம், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொள்ளாச்சி அடுத்த ஆஞ்சநேயர் கோயில் ஆற்றுப்படுகையில் திடீரென நள்ளிரவு 2 மணி அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அங்கு இரவு தங்கியிருந்த இரவுக் காவலர்கள் திருமலைசாமி, மகாலிங்கம் ஆகியோர் கோயில் நிர்வாகத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குக் கோயில் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கயிறு மூலம் கோயிலில் தஞ்சம் புகுந்த காவலர்கள் இருவரைப் பத்திரமாக மீட்டனர்.

SCROLL FOR NEXT