நீங்கள் அற்புதமான எதிரணி: இந்திய மகளிர் அணிக்கு பிரிட்டன் ஹாக்கி அணி வாழ்த்து

By செய்திப்பிரிவு

நீங்கள் அற்புதமான எதிரணி என்று இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரிட்டன் ஹாக்கி அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி 3-4 என்ற கணக்கில் பிரிட்டன் அணியிடம் போராடி, தோல்வியைத் தழுவியது.

தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணிக்குத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரிட்டன் ஹாக்கி அணியும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் ஹாக்கி அணி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒரு அற்புதமான ஆட்டம். அற்புதமான எதிரணி. நீங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடினீர்கள். அடுத்த சில வருடங்கள் உங்களுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வீராங்கனை நேகாவுக்கு பிரிட்டன் அணியினர் ஆறுதல் கூறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்