49 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி: இந்தியா புதிய மைல்கல்

By செய்திப்பிரிவு

49 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, 49 கோடிக்கும் அதிகமானோருக்கு (49,45,58,204) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 50.29 லட்சத்திற்கும் அதிகமான (50,29,573) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன

18-44 வயது பிரிவில் 27,26,494 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 4,81,823 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 16,92,68,754 பேர் முதல் டோசையும், 1,07,72,537 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 9782810 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 705162 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 275682 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 3097 பேர் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்