கல்வராயன்மலையில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பு; ஒருவர் கைது

By ந.முருகவேல்

கல்வராயன்மலையில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்ட நிலத்தில், கஞ்சா செடிகளை வளர்த்து வருவதைக் கண்டுபிடித்த சங்கராபுரம் போலீஸார், அது தொடர்பாக இன்று (ஜூன் 24) கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கல்வராயன் மலை மூளக்காடு அருகே, மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படும் விளைநிலத்தில் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக, சங்கராபுரம் வட்ட ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அவரது தலைமையிலான தனிப்படையினர் நேற்று (ஜூன் 23) மூளக்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (50) என்பவரின் விவசாய நிலத்தில் சோதனையிட்டபோது, அதில் மர வள்ளிக்கிழங்கு செடிக்கு இடையே பயிரிடப்பட்ட 37 கஞ்சா செடிகளை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

30 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்