சிவகங்கை நகராட்சி எரிவாயு தகன மேடை பழுது; உடல்களைத் தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை நகராட்சி எரிவாயு தகன மேடை பழுதடைந்ததை அடுத்து, இறந்தவர் உடல்களை தகனம் முடியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதற்கான அறிகுறியுடன் உள்ளோர் என 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அன்றாடம் கரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்போர் பிற காரணங்களால் இறப்போரின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்படுகின்றன.

இறந்தவர்களை ஒரு சிலர் மட்டுமே தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்கின்றனர். பெரும்பாலானோர் மருத்துவமனை அருகேயுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையிலேயே எரியூட்டுகின்றனர். இந்த எரியூட்டும் பணியைத் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் எரிவாயு தகன மேடையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு தினங்களாக இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தகன மேடைப் பழுதைச் சரிசெய்ய சென்னையில் இருந்து பொறியாளர்களை வரவழைத்துள்ளோம். ஓரிரு நாட்களில் பழுது சரி செய்யப்படும். அதுவரை பிரேதங்களைப் புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள வடக்கு மயானத்தில் இறந்தவர்கள் உடல்களைத் தகனம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளோம்'' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 secs ago

இந்தியா

7 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

37 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்