இன்றும் குறைந்த தங்கம் விலை; என்ன நிலவரம்?

By செய்திப்பிரிவு

சில நாட்களாகக் குறைந்து வரும் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. பவுனுக்கு 216 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ரூ.35,504க்கு விற்பனை ஆகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் குறைந்து வரும் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.4,438க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.35,504க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,376க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி 50 பைசா குறைந்து ரூ.73.50க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,500 ஆக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்