ஒரு நிமிட வாசிப்பு

என் மகள்; எனது பெருமிதம்: மகளின் கரோனா பணி; மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

மத்திய மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது மகள் கரோனா பணியில் இணைந்துள்ளதை சுட்டிக்காட்டி என் மகள்; எனது பெருமிதம் என நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திஷா நான் உன்னை இப்படியான ஒரு பணியில் காண நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன்.ஒரு பயிற்சி மருத்துவராக மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நீ பணியில் இணைந்திருக்கிறார்.

இந்தத் தேசத்துக்கு உனது சேவை மிகவும் தேவை. நீ நிச்சயமாக உன்னை நிரூபிப்பாய் என நான் நம்புகிறேன். போராளிக்கு பன்மடங்கு சக்தி சேரட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த ட்வீட்டுடன் முழுகவச உடையில் உள்ள தனது மகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT