சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: வெறிச்சோடியது கொடைக்கானல் 

By பி.டி.ரவிச்சந்திரன்

சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தமிழக அரசு தடைவிதித்ததையடுது்து கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாபயணிகள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், தூண்பாறை, மன்னவனர் சூழல் சுற்றுலாத்தலம், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகுழாம், தோட்டக்கலை துறை நிர்வகிக்கும் பிரையண்ட்பூங்கா, ரோஸ்கார்டன்.

நகராட்சியின் கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.

அரசின் தடை உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி கொடைக்கானல் மக்கள் மற்றும் சுற்றுலாவை நம்பியுள்ளோர் இன்று அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

இதன் அடுத்தகட்டமாக சுற்றுலாபயணிகளை அனுமதிக்கக்கோரி வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தமுடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்