தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஸ்டாலின். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் அவரது ஆசியுடன் அறிவாலய பிரவேசம் மேற்கொண்டார். திமுகவும் அவருக்கு சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில இணைச் செயலாளர் பதவியை வழங்கி கவுரவித்தது.
அந்தச் சூட்டுடன் குளச்சல் தொகுதிக்கு சீட் கேட்டு திமுகவில் விருப்ப மனு அளித்தார் ஸ்டாலின். காங்கிரஸ் வசமுள்ள இந்தத் தொகுதி நிச்சயம் திமுகவுக்குக் கிடைக்காது என்று தெரிந்தும், விருப்ப மனு கொடுத்துவிட்டு நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்டாலின், “எனக்கு சீட் குடுத்தீங்கன்னா பத்து தொகுதிக்கான தேர்தல் செலவை நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லி, நேர்காணல் செய்த ஸ்டாலின் உள்ளிட்ட வாத்தியார்களை வாயடைக்க வைத்துவிட்டாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.