டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ 13 வார விழிப்புணர்வுத் தொடரும், பரிசுகளும்!

By Sponsored Content

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ 13 வார விழிப்புணர்வுத் தொடர் வரும் ஞாயிறன்று (ஏப்.14) தொடங்குகிறது. வாராவாரம் 100 மாணவர்களுக்குப் பரிசு!

பள்ளிக் குழந்தைகளிடம் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா (DBSI), பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து முன்னெடுத்து வருகிறது.

‘கோவிட்’ வைரஸ் தொற்றுப் பரவலின்போது நாம் அனைவருமே சில சுகாதாரப் பழக்கங்களை முறையாகக் கடைப்பிடித்தோம். அதிலொன்று, ‘கைகளைக் கழுவுதல்.’ தன்சுத்தத்தின் முதல்படியான கை கழுவும் பழக்கத்தை இன்று பலரும் தொடராமல் விட்டுவிட்டோம். கை கழுவுதலின் மூலமாக வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு ஆகியவற்றிலிருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

DBSI-இன் ‘சுத்தம் சுகாதாரம்’ திட்ட வழிகாட்டுதலின்படி, 20 விநாடிகளுக்கு நம் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் நோக்கில் 13 வார குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணர்வுத் தொடர் வரும் தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) முதல் வெளிவரவுள்ளது.

இந்தச் சிறப்புப் பக்கத்தில் சுகாதார விளக்கப் படங்கள், குறுக்கெழுத்துப் போட்டி, வண்ணம் தீட்டுதல், பரிசுக்கான போட்டிக் கேள்விகள் ஆகிய இடம்பெற உள்ளன. இதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முதல் 100 மாணவர்களுக்கு வாராவாரம் பரிசுகள் வழங்கப்படும்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை ஜாலியான விளையாட்டுகளின் மூலமாக கொண்டுசெல்ல உதவும் இந்த சுகாதார செயல்பாட்டிற்குப் ஒத்துழைப்பு தாருங்கள்.

உங்கள் குழந்தைகளுக்காகக் கொஞ்சநேரம் ஒதுக்கி, இந்தப் பக்கத்தை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். நல்ல சுகாதாரப் பழக்கத்தைக் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு துணை நில்லுங்கள்.

ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் இந்தத் தொடரை வைத்து, இந்தத் திட்டத்தைப் பின்பற்ற தங்கள் பள்ளி மாணவர்களையும் ஊக்குப்படுத்துங்கள்.

https://www.hindutamil.in/special/sss05

இந்த லிங்கின் மூலமாக சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வுப் தொடர் பகுதி - 5 பக்கத்தைப் பார்க்கலாம். அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லி, பரிசினை வெல்லுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்