கால்பந்து விளையாட்டு, சீனாவில் கி.மு. 476-ம் ஆண்டில் முதல்முறையாக விளையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் பார்க்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது.
கால்பந்து விளையாட்டின்போது, அதில் பங்கேற்பவர்கள் சராசரியாக 9.65 கி.மீ. தூரம் ஓடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 80 சதவீதம் கால்பந்துகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகின்றன.
வடகொரியாவில் உள்ள ‘ரன்கிராடோ மே டே ஸ்டேடியம்’தான் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானமாகும்.
1964-ம் ஆண்டு பெரு நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட வன்முறையில்300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றபோது, தன்னுடன் கால்பந்தை எடுத்துச்செல்ல விரும்பினார். ஆனால் நாசா அமைப்பு அதை நிராகரித்து விட்டது.
1937-ம் ஆண்டு முதல்முறையாக கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
உலகின் மிகப் பழமையான கால்பந்து கிளப்பாக இங்கிலாந்தின் ஷெபீல்ட் கால்பந்து கிளப் உள்ளது. இது 1857-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
பிரேசில் நாடு அதிகபட்சமாக 5 முறை கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது.