வலைஞர் பக்கம்

பளிச் பத்து 40: ஏடிஎம் இயந்திரம்

செய்திப்பிரிவு

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பாரன் என்பவர் 1967-ம் ஆண்டில் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

ஜான் ஷெப்பர்ட் பாரன் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவில் உள்ள ஷில்லாங் நகரில்தான் 1925-ம் ஆண்டு பிறந்தார்.

பாரன் முதலில் ஏடிஎம்களுக்கு 6 இலக்கம் கொண்ட பின் நம்பரைத்தான் வைத்தார். ஆனால், அதை நினைவில் வைக்க கஷ்டமாக இருக்கும் என்று அவர் மனைவி கூறியதால், 4 இலக்க பின் நம்பரை வைத்தார்.

லண்டன் நகரில் உள்ள பர்க்லேஸ் வங்கியில் முதல் ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டது.

தங்கக் காசுகளைப் பெறும் வகையிலான ஏடிஎம் இயந்திரம் அபுதாபியில் உள்ளது.

இந்தியாவில் 1987-ம் ஆண்டு, மும்பையில் முதலாவது ஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது.

கேரளாவின் கொச்சி நகரில், மிதக்கும் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.

விரல் ரேகை வைத்து பணம் எடுக்கும் வகையிலான பயோமெட்ரிக் ஏடிஎம்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் அமைக்கப்பட்டன.

இங்கிலாந்தில் ஏடிஎம்கள், ‘கேஷ் மெஷின்’ என்று அழைக்கப்படுகின்றன.

உலகின் உயரமான இடத்தில் உள்ள ஏடிஎம் மையம் (கடல் மட்டத்தில் இருந்து 14,300 அடி) இந்திய - சீன எல்லையில் உள்ள நாதுலாவில் உள்ளது.

SCROLL FOR NEXT