மனிதர்கள் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாய்களை வீட்டில் வளர்த்து வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, அதிலிருந்த 12 நாய்களில்3 நாய்கள் உயிர்தப்பின.
மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காணும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாய்கள் குட்டிகளாக இருக்கும்போது 18 முதல் 20 மணிநேரம் வரை தூங்கும்.
சிறிய வகை நாய்கள் அதிக நாட்கள் உயிர்வாழும்.
நாய்கள் சராசரியாக 10 முதல் 14 வருடங்கள் வரை உயிர்வாழும்.
ரஷ்யாவைச் சேர்ந்த லைகா எனும் நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயாகும். 1957-ம் ஆண்டில் இது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
நாய்க் குட்டிகளுக்கு 28 பற்களும், பெரிய நாய்களுக்கு 42 பற்களும் இருக்கும்.
நாய்களை வளர்ப்பதால், ரத்த அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது.
நாய்களின் சராசரி உடல் வெப்ப நிலை 101 டிகிரி முதல் 102.5 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.