கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.5 -11

By செய்திப்பிரிவு

கடகம்: (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும்.

வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி | பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.

எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பெண்கள் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி | பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோதைரியம் கூடும். இந்த வாரம் கிரகங்களின் நிலை:

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.5 -11

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

வணிகம்

36 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்