வார ராசிபலன்கள்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.5 வரை

செய்திப்பிரிவு

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம்) கிரகநிலை - ராசியில் சனி(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் குடும்பத்தில் சிற்சில மனக்கசப்பு சூழ்நிலை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். திருமணம் தொடர்பான பேச்சுகள் வரும். தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

நீண்ட நாளாக தொழிலை விரிவுபடுத்த எண்ணியிருந்தது இந்த காலகட்டத்தில் நிறைவேறும். உத்யோகத்தில் புதிய வேலைகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் உங்களின் ஊதியம் உயரும். பெண்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்களைப் பொறுத்த வரை தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான காலமாக இருக்கும். உபகரணங்கள், உதவித்தொகை என அனைத்தும் கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.

திருஓணம்: உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

***********

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் செய்பவர்கள் லாபம் காண்பர். கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். உத்யோகஸ்தர்களுக்கு உடலில் இருந்த பிரச்சினைகள் குறையும். இதனால் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டு வேலைகளை கவனமுடன் செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பெண்கள் சிறிது விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.

கலைத்துறையினருக்கு சலிப்பு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். மாணவர்கள் நீங்கள் காதில்கேட்கும் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். இதனால் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: பணவரவு அதிகரிக்கும்.

சதயம் 4ம் பாதம்: புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்: சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.

***********

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் குரு(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். பொறுமையைக் கடைபிடியுங்கள். உத்யோகஸ்தர்கள் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மாணவர்கள் வெளியில் செல்லும் போது கவனம் தேவை. தேவையில்லாத இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் நலம்.

பூரட்டாதி 4ம் பாதம்: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.

உத்திரட்டாதி: நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

ரேவதி: பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT