கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் புதன், ராகு - விரய ஸ்தானத்தில் சூர்யன் என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியில் செவ்வாய் - சுக்கிரன் கூட்டணியால் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும்.

கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும்.

தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள்.

குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகள் வெற்றி பெறும். அரசியல்துறையினருக்கு சுபவிரயச் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
***********

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் குருவால் எதிலும் நன்மையே நடக்கும்.

காரியங்களில் தடை தாமதம் நீங்கும். லாபம் அதிகரிக்கும். மூத்தவர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரம் வேகமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடைகள் அகலும்.

வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு பணத் தேவை உண்டாகும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கிவர காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
****************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிக்கு 10ல் ராசிநாதன் புதன் மாறுகிறார். சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்திற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.

வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். கலைத்துறையினருக்கு பணவரத்து வந்து சேரும். அரசியல்துறையினருக்கு நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்