மாத பலன்கள்

ரிஷபம் ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023

செய்திப்பிரிவு

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சனி - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: 04-02-2023அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-02-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21-02-2023அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: எண்ணியத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் ரிஷபராசியினரே... இந்த மாதம் கோபத்தை குறைத்து மற்றவர்களுடன் வீண்பகை உண்டாகமல் பார்த்துக்கொள்ளவும். எனவே கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும்.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சகபணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு பிரச்சினை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.

பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கார்த்திகை: இந்த மாதம் கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ரோகினி: இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

மிருகசீரிஷம்: இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 15, 16 | அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பிப்ரவரி மாத பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT