இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு ஓரளவு திருப்தி தரும் விதமாக அமையும்.

ரிஷபம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாகக் குறைப்பீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும்.

மிதுனம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும்.

கடகம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

சிம்மம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் அனைத்தையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும்.

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். மாலை முதல் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள்.கலை பொருட்கள் சேரும்.

துலாம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பணவரவு உண்டு.

தனுசு: எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் - மனைவிக்குள் விவாதம் ஏற்பட்டு நீங்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும்.

மகரம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்கள். சொந்த - பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. மாலை முதல் தடைகள் ஒவ்வொன்றாக உடைபடும்.

கும்பம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். மாலை முதல் எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனச் செலவுகள் நீங்கும். நீண்ட நாளாக பேசாத உறவினர் வந்து பேசுவார்.

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்