மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி சொந்தங்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
ரிஷபம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
மிதுனம்: மனதில் தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணப்பிரச்சினையை சாமர்த்திய மாக சமாளித்து விடுவீர்கள். வேலைச்சுமை குறையும். சமூகத்தில் பிரபலமானவர்களுடன் சந்திப்பு நிகழும்.
கடகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கல்யாண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். கலை பொருட்கள் சேரும்.
சிம்மம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்கப் போராடுவீர்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
கன்னி: குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீட்டுக்குத் தேவை யான நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உங்களால் ஆதாயமடைந்த சிலர் உங்களைச் சந்திப்பார்கள். வெளியூர் பயணம் உண்டு. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மகரம்: சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
கும்பம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன் யம் ஏற்படும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடு வார். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும்.
மீனம்: எடுத்த வேலைகள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடிவடையும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர் பாராத செலவுகள், பயணம் ஏற்படக் கூடும்.