இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: ஜோதிடம், ஆயுர்வேதம், யோகாசனம், தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, புத்தங்கள் வெளியிட, கடன் பெற, கடன் பைசல் செய்ய, குழந்தையை தத்தெடுக்க, ஆலோசனை கூட்டங்கள் நடத்த, அன்ன தானம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். திடீர் பயணம், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டக் கூடாது. அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பேசி பழகவும்.

ரிஷபம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. மன இறுக்கம் நீங்கும். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மிதுனம்: வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல் நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கணவன் –மனைவிக்குள் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கன்னி: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

துலாம்: குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனக் குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: ஒருவித படபடப்பு, பயம் வர வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். மூத்த அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் வசூலாகும்.

மகரம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடானதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

கும்பம்: முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்